மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா


மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா
x

திரிபுரா முதல்-மந்திரி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாநிலங்களவையில் மேலும் ஒரு இடம் காலியாகி உள்ளது.

புதுடெல்லி,

திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேலும் ஒரு இடம் காலியாகி உள்ளது. எனினும், தற்போது மாநிலங்களவையில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பதற்காக மாநிலங்களவை சபாநாயகர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து மாநிலங்களவை எம்.பி. இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸில் இருந்து விலகி 2016ல் பாஜகவில் இணைந்தார் சாஹா. 2020ல் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்புன், மாநிலங்களவைக்கான தேர்தலில் ஏப்ரல் 3ஆம் தேதி போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு முன்னதாகவே தலைமை மாற்றம் செய்ய பாஜக முடிவு செய்ததை அடுத்து, மே 15ஆம் தேதி முதல் மந்திரியாக சாஹா பதவியேற்றார்.

69 வயதான மாணிக் சாஹாவை முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுத்தது பாஜக தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஏனெனில் அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட சாஹா வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் திரிபுராவின் 11வது முதல்மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.


Next Story