காந்தி ஜெயந்தியையொட்டி பாபாபுடன்கிரி மலையில் தூய்மை பணிகள்


காந்தி ஜெயந்தியையொட்டி பாபாபுடன்கிரி மலையில் தூய்மை பணிகள்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாபாபுடன்கிரி மலையில் தூய்மை பணிகள் நடைபெறும் என்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

காந்தி ஜெயந்தி

சிக்கமகளூரு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த 15-ந் தேதி முதல் இன்றுவரை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கிராமங்களையும் தூய்மையாக வைத்து கொள்ளும்படி பொதுமக்களுக்கும், தாலுகா, பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்துக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தநிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சந்திரதிரிகோண மலையில் உள்ள பாபாபுடன்கிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தூய்மை பணிகள் நடைபெறும் என்று மாவட்ட பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணிகள்

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபால கிருஷ்ணா கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை சிக்கமகளூரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறோம். இதற்காக மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இதேபோல தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கிராமங்களை தூய்மையாக வைத்து கொள்ள உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாபாபுடன்கிரி மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த தூய்மை பணியானது இ்ன்று காலை சிக்கமகளூரு கைமரம் பகுதியில் தொடங் பாபாபுடன்கிரி மலை வரை நடைபெறும்.

இன்று காலை தொடக்கம்

அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்து குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் நடைபெறும். இதில் அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள். மேலும் குப்பை கழிவுகளை கொட்ட கூடாது என்பது குறித்த விழிப்புணர்பு பிரசாரம் செய்யப்படும். இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story