லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் - லவ்லினா புகார்


லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் - லவ்லினா புகார்
x

லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் கூறியுள்ளார்.


புதுடெல்லி,

லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டி உள்ளார்.

காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்று விட்டது எனவும்,

கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப்பட்டு விட்டதாகவும் இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் கூறியுள்ளார்.லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story