ரூ.366 கோடி வரி மோசடி செய்ததாக சாலையோர வியாபாரியின் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள்..!
உத்தரபிரதேசத்தில் சாலையோரம் துணிகளை விற்று வரும் நபரின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் என்ற பெயரில் சோதனை நடந்துள்ளது.
லக்னோ,
சாலையோர துணி வியாபாரி 366 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வரி முறைகேடு செய்ததாக கூறி, அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசபர் நகர் பகுதியில் வசித்து வரும் இஜாஸ் அகமது சாலையோரம் துணிகளை விற்று வரும் நிலையில், அவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் என்ற பெயரில் சோதனை நடந்துள்ளது.
சுமார் 366 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎடி வரி முறைகேடு செய்துள்ளதாக கூறிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இஜாஸ் அகமது ,ஜிஎஸ்டி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story