டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை - வருண்காந்தி குற்றச்சாட்டு


டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை - வருண்காந்தி குற்றச்சாட்டு
x

டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று வருண்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை முன் வைத்து அரசு மீது பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'டெல்லி காற்று மாசுபாட்டினால் இதயம், நுரையீரல் பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயாளிகளால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினைைய மக்களோ, அரசோ தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை' என சாடியுள்ளார்.

மேலும் அவர், 'டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் 10-ல் 8 குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளன. பல ஆண்டுகளாக ஆலோசனை நடத்தியும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்போ, கவலையோ இல்லாதது ஏன்?' என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.


Next Story