"சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வருமானவரி சோதனையே இருக்காது" - தெலுங்கானா மந்திரி பேச்சு
தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் முறையை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார் என்று தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி கூறியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அம்மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
"2024-ம் ஆண்டு, நமது முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மத்தியில் ஆட்சி அமைப்பார். அதன்பிறகு நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும். வருமானவரி சோதனையே இருக்காது.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு சம்பாதிக்கலாம். தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் முறையை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார். அதற்கு முதலில் நாட்டில் மாற்றம் வர வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.
மல்லா ரெட்டி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்தது. இந்த பின்னணியில், வருமானவரி சோதனைக்கு எதிராக அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story