'ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருட்களின் மீதும் வரி உயர்த்தப்படவில்லை' - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிதித்துறை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், இன்றைய கூட்டத்தில் எந்த பொருட்களின் மீதும் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் குட்கா, பான் மசாலா போன்றவற்றின் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்தும், ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story