பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்துவதில் தவறில்லை - நிதிஷ் குமார்
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
காங்கிரஸ் கட்சி வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத், வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். என தெரிவித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில், நான் ஏற்கனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என தெரிவித்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.