காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு


காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு
x

3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியை சந்தித்தார்.

iபுதுடெல்லி,

3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியை சந்தித்தார்.பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு நிதிஷ் குமார் டெல்லி வருவது இதுவே முதல் முறை என்பதால் அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.

அதிலும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதிஷ் குமார் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் உள்ளிட்டவை குறித்து குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

ராகுல் காந்தியை சந்தித்த பிறகு நிதிஷ் குமார் கூறுகையில், " மாநில கட்சிகளை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பொதுத்தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முய்ற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். பிரதமர் வேட்பாளராக என்னை முன்னிறுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என்றார். முன்னதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் நிதிஷ் குமார் சந்தித்துப்பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story