கோதுமை, அரிசி, சர்க்கரை மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் இல்லை - பியூஷ் கோயல்
கோதுமை மற்றும் சர்க்கரையை மத்திய அரசு இறக்குமதி செய்யாது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது. தொடர்ந்து 2023 ஜூலை மாதம் முதல் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீட்டித்தது.
உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கோதுமை, அரிசி, சர்க்கரை மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் தற்போது இல்லை என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கோதுமை மற்றும் சர்க்கரையை மத்திய அரசு இறக்குமதி செய்யாது என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story