ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு


ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு
x

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மின்சார சட்டம் 2003 விதிகளின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.


Next Story