எதிர்க்கட்சிகளின் விளையாட்டை விளையாட நீதிமன்ற அமைப்பை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய சட்ட மந்திரி


எதிர்க்கட்சிகளின் விளையாட்டை விளையாட நீதிமன்ற அமைப்பை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது:  மத்திய சட்ட மந்திரி
x

நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்து நீதிமன்ற அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்த துல்லிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.



புவனேஸ்வர்,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் அவர் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடந்த மத்திய அரசின் சட்ட அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசும்போது, நீதிமன்ற அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்த நாட்டின் உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் துல்லிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என அழுத்தந்திருத்தத்துடன் கூறினார்.

இந்திய நீதிமன்ற அமைப்பு சுதந்திரமுடன் செயல்பட கூடியது என கூறிய அவர், எதிர்க்கட்சியின் விளையாட்டை விளையாடும்படி அவர்களை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

இந்திய ஜனநாயகம் பற்றி ஒருவரும் கேள்வி கூட எழுப்ப முடியாது. ஏனெனில், ஜனநாயகம் நமது ரத்தத்திலேயே ஓடுகிறது என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகள் ஆதரவுடன், இந்தியாவுக்கு எதிராக முன்கள தாக்குதலை தொடுப்பதற்கான ஆதரவை இந்த கும்பல் பெறுகிறது.

அவர்கள் இந்திய ஜனநாயகம், இந்திய அரசு, நீதி துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதுள்ள நம்பக தன்மை மீதும் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், பிரதமர் மோடிஜியின் தலைமையின் கீழ் இந்தியா மிக பெரிய புத்துணர்ச்சிக்கான பயணத்தில் நடைபோடுகிறது என துக்டே-துக்டே கும்பல் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.



Next Story