2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்று இல்லை - அஜித் பவார் பேட்டி


2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்று இல்லை - அஜித் பவார் பேட்டி
x

பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் யார்? என்ற முடிவை, ஓரிரு விஷயங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்க முடியாது என அஜித் பவார் தெரிவித்தார்.

மும்பை:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் வியூகம் தொடர்பாக இந்த கூட்டணியின் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமைக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். எனினும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அஜித் பவார், தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை என்றார். மேலும், இதுபோன்ற முடிவானது ஓரிரு விஷயங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படாது, பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

'அனைவரும் பெரிய அளவில் பிரசாரம் செய்வார்கள். ஆனால், ஆனால் நாட்டின் நலன்களை பாதுகாப்பது யார்? நாடு யாருடைய கைகளில் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும்? சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தியது யார்? என்பதுபோன்ற அம்சங்கள் மிகவும் முக்கியம்' என்றும் அஜித் பவார் குறிப்பிட்டார்.


Next Story