என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியல் 2023; டாப் 10-ல் இடம் பிடித்த லயோலா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி


என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியல் 2023; டாப் 10-ல் இடம் பிடித்த லயோலா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி
x
தினத்தந்தி 5 Jun 2023 1:37 PM IST (Updated: 5 Jun 2023 1:48 PM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி என்ற பெருமையுடன் என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.

புதுடெல்லி,

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இதனை அடுத்து பெங்களூரு ஐ.ஐ.எஸ். 2-வது இடமும், டெல்லி ஐ.ஐ.டி. 3-வது இடமும் பிடித்து உள்ளன.

பட்டியலில், மும்பை ஐ.ஐ.டி. 4-வது இடமும், கான்பூர் ஐ.ஐ.டி. 5-வது இடமும் பிடித்து உள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் மையம் 6-வது இடமும், காராக்பூர் ஐ.ஐ.டி. 7-வது இடமும், ரூர்கி ஐ.ஐ.டி. 8-வது இடமும், கவுகாத்தி ஐ.ஐ.டி. 9-வது இடமும் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்து உள்ளன.

நாட்டிலேயே சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி என்ற பெருமையுடன், அதிலும் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. 9-வது இடம் பிடித்து உள்ளது.

இதுதவிர, பல்கலைக்கழக அளவில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில், கோவை அமிர்த விஷ்வ வித்யாபீடம் 7-வது இடமும், வேலூர் வி.ஐ.டி. 8-வது இடமும் பிடித்து உள்ளது.

ஐ.ஐ.எம். வரிசையில் ஆமதாபாத் ஐ.ஐ.எம். முதல் இடமும், பெங்களூரு ஐ.ஐ.எம். மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம். முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்து உள்ளன.

இதேபோன்று, நாட்டிலேயே சிறந்த கல்லூரிக்கான பெருமையை டெல்லி பல்கலை கழகத்தின் மிரண்டா ஹவுஸ் கல்லூரி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரி 3-வது இடம் பிடித்து உள்ளது.

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4-வது இடமும், சென்னை லயோலா கல்லூரிக்கு 7-வது இடமும் கிடைத்து உள்ளது.


Next Story