தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிப்பு - ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தகவல்


தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிப்பு - ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தகவல்
x

கோழிக்கோடு பகுதியில் பழந்தின்னி வவ்வால்களில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

'நிபா' வைரஸ் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டிய மாநிலம், பீகார், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா ஆகிய 9 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் வவ்வால்களில் 'நிபா' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தெலங்கானா, குஜராத், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அசாமில் உள்ள துபரி மாவட்டம், மேற்கு வங்கத்தில் உள்ள மியானகுரி மற்றும் கூச்பிகார் ஆகிய பகுதிகளில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பழந்தின்னி வவ்வால்களில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் நிபா வைரஸ் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



Next Story