நிபா வைரஸ் எதிரொலி: மாஹே பிராந்தியத்தில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!


நிபா வைரஸ் எதிரொலி: மாஹே பிராந்தியத்தில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 17 Sept 2023 1:59 PM IST (Updated: 17 Sept 2023 2:49 PM IST)
t-max-icont-min-icon

நிபா வைரஸ் எதிரொலியால் புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாஹே,

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் கட்டுப்பாட்டில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஹே பிராந்தியத்திற்கு வருகிற 24-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாஹே பிராந்தியத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பிராந்திய நிர்வாக அதிகாரி விடுமுறை அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கோழிக்கோட்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story