காஷ்மீரில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
காஷ்மீரில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் புதிய கிளைகளை உருவாக்கி அங்கு அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டி வருவது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று காஷ்மீரின் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியது. குல்காம், பந்திபோரா, சோபியான் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது பெரிய அளவிலான குற்றவியல் தரவுகளைக் கொண்ட பல டிஜிட்டல் சாதனங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story