பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க முடிவு - மத்திய மந்திரி சபை ஒப்புதல்


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க முடிவு - மத்திய மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 19 May 2022 3:57 AM IST (Updated: 19 May 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெ ல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய திருத்தம், பெட்ரோலில் 20 சத வீதம் எத்தனாலை 2030-ம் ஆண்டுக்குள் கலக்க நிர்ணயித்து இருந்த இலக்கை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை 2025 -26 ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்று திருத்தம் செய்யப்படும். தற்போது பெ ட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது.

குறிப்பிட்ட வகைகளில் உயிரி எரிபொருட்களை ஏற்றுமதி செய்யவும் அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. நமது நாட்டில் உயிரி எரிபொருளுக்கான தேசிய கொள்கை 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்போது இந்த கொள்கையில் கொண்டு வரவுள்ள திருத்தங்களால் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் அன்னிய இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறையும்.

பொதுத்துறை நிறுவனங்கள் சீர்திருத்தம் பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவுகளை , துணை நிறுவனங்களை மூடவும், பங்குகளை விற்கவும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அந்தந்த நிறுவனங்களின் இயக்குனர் குழுகளுக்கு வழங்குவது எனவும் மத்திய மந்திரிசபை கூட்த்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் செய்வதை அடிப்படையாகக் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் வீணான செயல்பாடுகளை , நிதி செலவினங்களை தடுக்க விரைந்து முடிவு எடுக்க இது வழிவகுக்கும்.


Next Story