தீர்த்தஹள்ளியில் துங்கா, ஷராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலங்கள்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


தீர்த்தஹள்ளியில் துங்கா, ஷராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலங்கள்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தஹள்ளியில் துங்கா, ஷராவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் ரூ.50 கோடியில் 2 பாலங்களை கட்ட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தீர்த்தஹள்ளி தாலுகா துதூர்-முன்டவள்ளி கிராமங்கள் இடையே துங்கா ஆற்றுக்கு இடையே புதிய பாலம் கட்ட ரூ.24.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா காரணிகிரி-பப்பனமனே இடையே ஷராவதி ஆற்றின் குறுக்கே ரூ.24.36 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. இந்த திட்ட பணிகளை விரைவாக தொடங்க விரைவில் டெண்டர் விடப்படும்.

இந்த பணிகள் எனது தீர்த்தஹள்ளி தொகுதியில் நடக்கிறது. இந்த பாலங்களை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். முந்தைய அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்தன. இந்த நாங்கள் அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். இந்த 2 திட்ட பணிகளும் கர்நாடக மாநில சாலை மேம்பாட்டு கழகம் மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.


Next Story