நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம் தகவல்
நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 16-ந் தேதி வரையிலான நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.51 சதவீத அதிகம் ஆகும்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேரடி வரி வசூலுக்கான முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.18.23 லட்சம் கோடி ஆகும். அதில் 47.45 சதவீதம் தற்போது எட்டப்பட்டுள்ளது.
நேரடி வரி வசூல் உயர்வுக்கு, நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருப்பதுதான் காரணம் ஆகும்.
தற்போதைய நேரடி வரி வசூலில் நிறுவனங்களுக்கான வருமான வரி ரூ.4.16 லட்சம் கோடி, பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி ரூ.4.47 லட்சம் கோடி அடங்கும். வரி செலுத்துவோருக்கு, கடந்த 16-ந் தேதி வரை ரூ.1.22 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story