முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு
தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் மார்ச் மாதம் 18-ந்தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story