நாகலாந்து தேர்தலில் என்.டி.பி.பி. கட்சியுடன் கூட்டணி; அசாம் முதல்-மந்திரி


நாகலாந்து தேர்தலில் என்.டி.பி.பி. கட்சியுடன் கூட்டணி; அசாம் முதல்-மந்திரி
x

நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் என்.டி.பி.பி. கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என அசாம் முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.



புதுடெல்லி,



நாகலாந்து முதல்-மந்திரி நெய்பியூ ரியோ, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். அவருடன் அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவும் இருந்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பல ஆண்டுகளாக நாகலாந்தில் ஊடுருவல்கள் நடந்து வந்தன. இதனை நிறுத்துவதற்காக ஊடுருவல் அமைப்புடன் நாகலாந்தில் 18 ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

நாகலாந்தில் நடந்து வரும் மேற்கண்ட அமைதிக்கான முயற்சி பற்றியும் மத்திய மந்திரியுடனான இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்னர், அசாம் முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவரான ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது, நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.) எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என கூறியுள்ளார். என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும், நாங்கள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அசாம் முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.


Next Story