தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான அரசை அமைக்கும் - மோடி பேச்சு


தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான அரசை அமைக்கும் - மோடி பேச்சு
x

3-வது முறையாக பிரதமராக நாளை மறுநாள் மோடி பதவி ஏற்க இருக்கிறார்.

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மோடி சந்தித்தார். தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலையும் ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கி ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதையடுத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். நாளை மறுநாள் (ஜூன் 9) பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை முன்பு பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-

பிரதமராக நியமிக்கும் நியமன கடிதத்தை ஜனாதிபதி என்னிடம் வழங்கியுள்ளார். நாளை மறுநாள் பதவி ஏற்க போவதாக தெரிவித்துள்ளேன். மந்திரிகள் பட்டியலை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வலுவான அரசை அமைக்கும். 18-வது மக்களவை என்பது ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திட்டு உள்ளது. அதே உற்சாகத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும்.

நாட்டை 3-வது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இந்தியாவின் வளர்ச்சி தொடரும் என்று இந்த தருணத்தில் நான் உறுதியளிக்கிறேன். 10 ஆண்டுகால அனுபவங்கள் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம். சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்ட போதும் நமது பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது. உலகம் நெருக்கடியை சந்தித்த நிலையில், இந்தியா சவாலை எதிர்கொண்டு வென்றது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story