என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து மத்திய மந்திரி அறிவிப்பு

என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2023 2:45 AM IST (Updated: 2 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

இந்த அமைப்பின் 63-வது நிறுவன தினம் நேற்று நடைபெற்றது.

புதுடெல்லி,

பள்ளிக்கல்விக்கான உச்ச அமைப்பாக என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் 'தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்' உள்ளது.

கல்வி தொடர்பான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், பாடத்திட்ட உருவாக்கம், பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்களில் என்.சி.இ.ஆர்.டி. ஈடுபட்டுள்ளது.

இந்த அமைப்பின் 63-வது நிறுவன தினம் நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், என்.சி.இ.ஆர்.டி.க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

Next Story