சத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 பேர் பலி
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கஹெர் துல்ஹெட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பொது மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இந்த தாக்குதலில் கிராமத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்தி தப்பி ஓடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் கஹெர் துல்ஹெட் கிராமத்தை சேர்ந்த சோதி ஹங்கா மற்றும் மத்வி நந்தா என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் முதல், சத்தீஷ்காரில் 14 புதிய பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 7 முகாம்கள் சுக்மா மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்த முகாம்கள், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை அச்சுறுத்தலில் இருந்து விடுபடவும், வளர்ச்சி பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவுகின்றது.