காஷ்மீரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை


காஷ்மீரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை இன்று காலை 5 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.

ஜம்மு,

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கான சதி திட்டம் தீட்டிய வழக்கில், தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று காலை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டின் கடந்த மே மாதத்தில், புத்காம், சோபியான், புல்வாமா, ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் ஆகிய மாவட்டங்களில் 13 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி இருந்தது.

இதில், செயல்சார்ந்த மற்றும் சைபர் இணையதளம் ஆகியவற்றின் வழியாக பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டங்களை தீட்டியது, தொடர்புடைய வழக்கில் இந்த சோதனை நடந்தது.

கடந்த ஆண்டு இந்த வழக்கு பதிவானது. இதுபற்றி என்.ஐ.ஏ. கூறும்போது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத வன்முறை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்தது.

நவீன வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தரைமட்ட பணியாளர்கள் ஆகியோரோடு கூட்டு சேர்ந்து, பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் ஈடுபட ஒரு பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டு இருந்தது என முன்பு கூறியிருந்தது.

கடந்த ஜூன் 26-ந்தேதி இதேபோன்றதொரு சோதனையையும் நடத்தியிருந்தது. இதன் ஒரு பகுதியாக மீண்டும் காஷ்மீரின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.


Next Story