நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும்வரை கால அவகாசம் வழங்குமாறு சோனியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் கால அவகாசம் கோரியதை அடுத்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) சோனியா காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story