நிழற்குடையை திருடி சென்ற மர்மநபர்கள்பஸ் நிறுத்தத்தையே காணோம்...!


நிழற்குடையை திருடி சென்ற மர்மநபர்கள்பஸ் நிறுத்தத்தையே காணோம்...!
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பஸ் நிறுத்த நிழற்குடையை இருக்கைகளுடன் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் பயணிகள் பஸ்சுக்காக கால்கடுக்க காத்திருக்கும் அவலம் உள்ளது.

பெங்களூரு

பஸ் நிறுத்தங்கள்

தொழில்நுட்ப நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு, பூங்கா நகரம் என புனைப்பெயர் பெற்ற பெங்களூரு மாநகரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசித்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்க பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பயணிக்க விரும்பும் மக்கள் காத்திருக்க பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

இதில் ஒரு சில பஸ் நிறுத்த நிழற்குடைகள் சேதமடைந்து கிடப்பதுடன், இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. இது ஒருபுறம் இருக்க பெங்களூருவில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையை இருக்கைகளுடன் மர்மநபர்கள் அலேக்காக தூக்கி சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு விதானசவுதா (சட்டசபை கட்டிடம்) அருேக கன்னிங்காம் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் விதானசவுதா, கப்பன் பூங்கா, ஐகோர்ட்டு, நூலகத்திற்கு வந்து செல்வோர் வசதிக்காக பஸ் நிறுத்தம் உள்ளது.

இங்கு நீண்ட காலமாக பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில், மழையில் கால்கடுக்க காத்து நின்றனர்.

இதைத்தொடர்ந்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்டு மாதம் தான் ரூ.10 லட்சம் செலவில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் புதியதாக பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு, பயணிகள் அமர இருக்கைகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.


Next Story