தேடப்படும் குற்றவாளியை போலீசார் உடையில் வந்து சுட்டு தள்ளிய மர்ம நபர்கள்


தேடப்படும் குற்றவாளியை போலீசார் உடையில் வந்து சுட்டு தள்ளிய மர்ம நபர்கள்
x

பீகாரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் சீருடையில் வந்து மர்ம நபர்கள் சுட்டு தள்ளியுள்ளனர்.



பாட்னா,



பீகாரை சேர்ந்த நபர் விரேந்திர தாக்குர். ரெயில்வே ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஹனிடிராப் முறையில் அவரை அழைத்து கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. இதில், லக்னோ ரெயில் நிலையத்தில் வைத்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், இடுப்பு பகுதியில் அவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. எனினும், அதன்பின்னரும் அவர் பீகாரின் நர்கட்டியாகஞ்ச் பகுதியில் பல்வேறு ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிர்தோஸ் என்பவர் ஆள் வைத்து, தாக்குரை சுட்டு தள்ள முயன்றது தெரிய வந்தது. இதுபற்றி அரசு ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பிர்தோஸ் மற்றும் பிட்டு ஜெய்ஸ்வால் சம்பவத்தில் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், பிர்தோஸ் மற்றும் பிட்டு ஜெய்ஸ்வால் சிக்காமல் தப்பி விட்டனர். தாக்குரின் 2வது மனைவி குஸ்பூண் தாராவின் நெருங்கிய உறவினர் பிர்தோஸ். தனது அத்தை மகளான உறவினரை திருமணம் செய்ததற்கு பழி வாங்க தாக்குரை, பிர்தோஸ் தாக்கியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாக்குரின் முதல் மனைவி பிரியங்காவை, பிட்டு ஜெய்ஸ்வால் திருமணம் செய்துள்ளார். இந்த சூழலில், லக்னோ நகரில் உள்ள நீல்மாதா பகுதியில் வைத்து, போலீசாரின் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த தாக்குதலில், பிர்தோஸ் மற்றும் பிட்டு ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில், தாக்குரின் முதல் மனைவி பிரியங்கா தாக்குர், அவரது காதலர் பிட்டு ஜெய்ஸ்வால் மற்றும் பிர்தோஸ் ஆகியோர் மீது தாக்குரின் 2வது மனைவி தாரா போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story