அமராவதி மருந்து கடைக்காரர் கொலை வழக்கு; திடுக்கிடும் புதிய தகவல்


அமராவதி மருந்து கடைக்காரர் கொலை வழக்கு; திடுக்கிடும் புதிய தகவல்
x

உமேஷ் கோல்கே கொலையில் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்க உள்ளது.

மும்பை,உமேஷ் கோல்கே கொலையில் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்க உள்ளது.

மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே (வயது54). இவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை கூறிய பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் முகநூலில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த போது கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

உமேஷ் கோல்கே நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதவிகளை பகிர்ந்தற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரது கொலை மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முக்கிய குற்றவாளி இர்பான் கான், கால்நடை டாக்டர் யுசுப் கான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

இதில் கால்நடை டாக்டர் யூசுப் கான், கொலை செய்யப்பட்ட உமேஷ் கோல்கேவுக்கு பல ஆண்டு நண்பர் என அவரது தம்பி மகேஷ் கோல்கே கூறினார். யூசுப் கானை 2006- ஆம் ஆண்டு முதலே தங்களுக்கு தெரியும் எனவும் மகேஷ் கோல்கே தெரிவித்தார்.

இதற்கிடையே உமேஷ் கோல்கே கொலை சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்க உள்ளது. இதுகுறித்து அமராவதி கமிஷனர் ஆர்த்தி சிங் கூறுகையில், " என்.ஐ.ஏ.க்கு வழக்கு மாற்றப்பட்டது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. திங்கள்கிழமை(இன்று) எங்களுக்கு அது தொடர்பான உத்தரவு வரும். அதன்பிறக விசாரணை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். " என்றார். எனினும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அமராவதி சென்று விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story