"கையை பிடிச்சு இழுத்தியா...?" - முன்னாள் காதலியை இழுத்த மும்பை நபருக்கு ஓர் ஆண்டு ஜெயில்


கையை பிடிச்சு இழுத்தியா...? - முன்னாள் காதலியை  இழுத்த மும்பை நபருக்கு ஓர் ஆண்டு ஜெயில்
x

முன்னாள் காதலியை பொது இடத்தில் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை

பொது இடத்த்கில் காதலியாகவே இருந்தாலும் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது அவரது கண்ணியத்தையும், அடக்கத்தையும் சீர்க்குலைப்பதற்கு சமம் எனக் குறிப்பிட்டு மும்பை மாஜிஸ்திரேட் கிராந்தி எம் பிங்கிள் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு தனது முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்திற்காகவும் பொது இடத்தி அவரது கையை பிடித்து இழுத்து அவரது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில் ஒரு நபருக்குதான் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியது. மேலும் காதல் விவகாரமாகவே இருந்தாலும் அந்த நபர் அவ்வாறு நடந்துக்கொள்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தரப்பிலிருந்து, பெரிய தவறை செய்ததாக நீதிமன்றம் கூறியிருந்தாலும், சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் (2014) ஆன நிலையில், அதன் கால அவகாசத்தை கருத்தில்கொண்டு கடுமையான தண்டனை வழங்குவது நியாயமில்லை என்றும் வாதிடப்பட்டிருக்கிறது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறி, மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில்தான் ஓராண்டு சிறையும் வழங்கப்பட்டு, 5,000 ரூபாய் அபராதமும் அந்த நபருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.


Next Story