வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் கடந்த மாதத்தில் மொத்த வருவாய் ரூ.9.21 கோடி ஈட்டியது - ரெயில்வே அதிகாரி தகவல்
வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் கடந்த மாதத்தில் மொத்த வருவாய் ரூ.9.21 கோடி அளவில் ஈட்டி உள்ளதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மும்பை,
வந்தே பாரத் ரெயில் சேவை மூலம் கடந்த மாதத்தில் மொத்த வருவாய் ரூ.9.21 கோடி அளவில் ஈட்டி உள்ளதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி அன்று வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பயணிகளிடம் அபரிதமான வரவேற்பு வழங்கினர். இந்த ரெயில் 16 பெட்டிகளுடன் ஆயிரத்து 128 பயணிகள் அமரும் வசதி கொண்டு உள்ளது. காந்திநகரில் இருந்து மும்பைக்கு தோராயமாக 5 அரை மணி நேரத்தில் வந்து சேருகிறது. மும்பையில் இருந்து காந்திநகருக்கு ஏ.சி நாற்காலி சேர் இருக்கையில் பயணிக்க ரூ.1,275 கட்டணமாகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்கு ரூ.1,440 ஆகவும் கட்டணம் நிர்ணயக்கப்பட்டு உள்ளது. அதே போல மும்பையில் இருந்து காந்திநகருக்கு சொகுசு சேர் இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 455 ஆகவும், மறுமார்க்கமாக ரூ.2 ஆயிரத்து 650 ஆக வசூலிக்கப்படுகிறது.
தற்போது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி 2 மாதங்களில் 3 வது வந்தே பாரத் ரெயில் ரெயில் பயணிகளிடம் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ரெயில் எண் 20901 மும்பை-காந்திநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் மூலம் ரூ.4 கோடியே 49 லட்சமும், 20902 எண் கொண்ட காந்திநகர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் மூலமாக ரூ.4 கோடியே 72 லட்சம் வருவாய் ஈட்டி உள்ளது. மொத்த வருவாய் ரூ.9 கோடியே 21 லட்சம் ஆகும். கடந்த அக்டோபர் மாதம் பயணச்சீட்டு கட்டணம் மூலும் ரூ.8 கோடியே 25 லட்சம் வருவாய் ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் வந்தே பாரத் ரெயில் 130 சதவீதம் அளவில் தற்போது இயங்கி வருகிறது. இருப்பினும் இந்த ரெயிலின் சேவையால் சதாப்தி எக்ஸ்பிரஸ், போன்ற மும்பை ஆமதாபாத் இடையே இயக்கப்படும் மற்ற ரெயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை. புதிய வந்தே பாரத் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் மற்ற ரெயில்களில் சராசரியாக 100 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.