தவறாக உச்சரிப்பு செய்ததால் 5 வயது சிறுமியின் கையை முறித்த டியூசன் ஆசிரியர் கைது...!
மத்திய பிரதேசம் போபாலில் பேரட் என்ற வார்த்தைக்கு தவறாக உச்சரிப்பு செய்ததால் 5 வயது சிறுமியை அடித்து கையை முறித்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின், போபாலில் டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக சிறுமியின் கையை முறித்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறுமியின் பெற்றோர், ஹபீப்கஞ்சில் உள்ள வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஆசிரியரிடம் பள்ளி நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக டியூசன் படிக்க அனுப்பியுள்ளனர்.
ஆசிரியர் வழக்கம் போல் பாடம் எடுக்கையில், சிறுமியிடம் "பேரட்" என்று வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்டுள்ளார். சிறுமி சரியாக உச்சரிக்காததால் கையை முறுக்கி, கண்ணத்தில் பளீரென அறைந்துள்ளார். இதனால் சிறுமிக்கு வலி அதிகமாக ஏற்பட்டுக் கதறியுள்ளார்.
இதையடுத்து, பெற்றோரிடம் கூறிய சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது, சிறுமியை எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.
சிறுமிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிறுவர்கல் நீதிச்சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.