தலைநகர் டெல்லியில் இந்தாண்டு மட்டும் 3,800 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு


தலைநகர் டெல்லியில் இந்தாண்டு மட்டும் 3,800 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு
x

தேசிய தலைநகரில் டிசம்பரில் மட்டும் 260 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லி,

டிசம்பரில் தேசிய தலைநகரில் 260 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த ஆண்டு மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,800 ஆக உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) வெளியிட்ட அறிக்கையின்படி, நகரத்தில் இந்த ஆண்டு 241 மலேரியா மற்றும் 44 சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் டிசம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் 4,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. 2021 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 23 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை இந்த நோயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கொசுக்களால் பரவும் நோய்களின் அறிகுறிகளில் அதிக காய்ச்சல், தலைவலி, சொறி, தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை அடங்கும்.

டெல்லியில் 2016-ல் 4,431, 2017-ல் 4,726, 2018-ல் 2,798, 2019-ல் 2,036, 2020-ல் 1,072 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வரை 1,69,766 வீடுகளில் கொசு லார்வாக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story