மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்


மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
x

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சூரத்,

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 1,262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மோர்பி அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவிர மேலும் 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்த அக்டோபர் மாதம் 30ம் தேதியில் இருந்து ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலை காணவில்லை. அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த வாரம் அவரது மனு விசாரணைக்கு வர உள்ளது.

அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறி உள்ளார்.


Next Story