25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் வருகிற 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் வருகிற 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ந்தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள் முழுமையாக விலகும். இந்த நிலையில் இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்குகிறது.
மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்றும் படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story