பெங்களூருவில் குரங்குகள் தொல்லைக்கு எடுத்த நடவடிக்கை அறிக்கையாக வேண்டும்-அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் குரங்குகள் தொல்லைக்கு எடுத்த நடவடிக்கை அறிக்கையாக வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் ராதா நந்தன் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், பெங்களூருவில் குரங்குகளின் தொல்லையை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது. அந்த மனு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "பெங்களூருவில் குரங்குகளின் தொல்லையை தடுப்பது குறித்து ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி பிறப்பித்த உத்தரவு மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி மற்றும் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story