பணமோசடி விவகாரம்; ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்க துறை


பணமோசடி விவகாரம்; ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்க துறை
x

பஞ்சாப், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அமலாக்க துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

குருகிராம்,

அரியானாவின் குருகிராம் நகரில் பஷாரியா கிராமத்தில் எம்.3.எம். இந்தியா என்ற பெயரில் தனியார் உட்கட்டமைப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு 88.29 ஏக்கர் அளவிலான அசையா சொத்துகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.300.11 கோடி என கூறப்படுகிறது. பணமோசடி தடுப்பு சட்டம் 2022-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோன்று சமீபத்தில், பஞ்சாப், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில், மால்புரோஸ் இன்டர்நேசனல் என்ற தனியார் மதுபான நிறுவனத்தின் இடங்கள், செயல்பட்டு வரும் வளாகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.78.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அது தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கையும் பணமோசடி தடுப்பு சட்டம் 2022-ன் கீழ் எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு இருந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிறுவனம், அதன் ஆலை கழிவுகளை அதனுடைய வளாகங்களில் அமைக்கப்பட்ட கிணறுகளில் சட்டவிரோத வகையில் செலுத்தி, மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்பட வழிவகுத்தது என்று அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.

இதனால், அந்த பகுதிகளை சுற்றி வசித்து வரக்கூடிய பொதுமக்களின் சுகாதார நலன்களுக்கு ஆபத்து மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவை ஏற்பட்டது என்றும் அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.


Next Story