பணமோசடி வழக்கு: ராஜஸ்தானில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
ஜல் ஜீவன் மிஷன் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக ராஜஸ்தானில் உயர் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் அமலாக்க இயக்குனரகம் இன்று சோதனை நடத்தி வருகிறது.
மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூர் மற்றும் தௌசாவில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்கும் மாநில அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கும் நாடு முழுவதும் இத்தகைய சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறையையும், மத்திய அரசையும் அம்மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story