பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரிடமிருந்து ரூ.11.88 கோடியை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை


பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரிடமிருந்து ரூ.11.88 கோடியை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை
x

பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவின் ரூ.11.88 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சட்டவிரோத பண பரிமாற்ற விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு அங்கமாக, அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் பெர்ஹைட், ராஜ்மகால் ஆகிய நகரங்களில், பங்கஜ் மிஸ்ராஉள்பட சிலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பங்கஜ் மிஸ்ராவின் 37 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.11.88 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.


Next Story