'பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்' - உத்தரபிரதேச பெண் மந்திரி


பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம் - உத்தரபிரதேச பெண் மந்திரி
x

கோப்புப்படம்

பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம் என்று உத்தரபிரதேச பெண் மந்திரி குலாப் தேவி தெரிவித்தார்.

சம்பல்,

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இதைப்போல இந்தியாவிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தரபிரதேச மேல்நிலைக்கல்வித்துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) குலாப் தேவியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், 'பிரதமர் மோடி ஒரு அவதாரத்தை போன்றவர். அசாத்திய திறமைகளை கொண்ட ஒரு மனிதர். அவருடன் யாரும் போட்டியிட முடியாது. அவர் விரும்பினால், அவர் உயிருடன் இருக்கும் வரை பிரதமராக இருக்கலாம். யூகத்தால் எதுவும் நடக்காது. அவ்வளவு அசாதாரணமான ஆளுமை அவர். கடவுள் அவரை தனது பிரதிநிதியாக அனுப்பியுள்ளார்' என புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடியை முழு தேசமும் பின்பற்றுவதாக கூறிய குலாப் தேவி, இதைவிட பெரிய அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.


Next Story