பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதல்: தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்
பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடெல்லி,
பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், சுமார் ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தம் உள்நாட்டு தொழில்களின் பங்கேற்புடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இந்திய-ரஷ்ய பன்னாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
Related Tags :
Next Story