திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற மந்திரி ரோஜாவின் கார் டிரைவர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்..!


திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற மந்திரி ரோஜாவின் கார் டிரைவர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்..!
x
தினத்தந்தி 12 Jun 2022 10:38 AM IST (Updated: 12 Jun 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்து வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது மந்திரி ரோஜாவின் கார் டிரைவர் லோகேஷ் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் மகா துவார வழியாக தரிசனத்திற்கு சென்றனர். அங்கு பயோமெட்ரிக் மூலம் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் இடத்திற்கு சென்ற போது அங்கு உள்ளவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

இதனால் யோகேஷ் மற்றும் பாதுகாவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து அங்குள்ள செய்தி சேனல்களில் பிளாஷ் நியூஸ் வெளியானது. தகவல் அறிந்த மந்திரி ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகளிடம் சென்று ஏன் என்னுடைய கார் டிரைவர் மற்றும் பாதுகாவலரே தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர்கள் தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து மந்திரி ரோஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


ஏற்கனவே நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் கோவில் கோவில் மாட வீதிகளில் செருப்பு அணிந்து போட்டோ ஷூட் எடுத்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story