ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு
கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story