மத சிறுபான்மையினர் விவகாரம்: அமெரிக்க ஆணையத்துக்கு இந்தியா கண்டனம்


மத சிறுபான்மையினர் விவகாரம்: அமெரிக்க ஆணையத்துக்கு இந்தியா கண்டனம்
x

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறியிருந்தது. இந்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடக்கப்படுவதாகவும், குறிப்பாக மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகசர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறியிருந்தது. இந்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'இந்தியாவைப் பற்றிய, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான கருத்துகளைப் பார்த்தோம். ஆணையத்தின் கட்டாயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க அதன் அறிக்கைகளில் உண்மைகளை மீண்டும் மீண்டும் தவறாக சித்தரித்து வருவது வருந்தத்தக்கது' என்று கூறினார். ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் நம்பகத்தன்மை மற்றும் புறநிலை பற்றிய கவலைகளை வலுப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story