கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு


சிம்லாவில் நிலச்சரிவு
x

வரும் 12-ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story