89-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை


89-வது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 29 May 2022 7:40 AM IST (Updated: 29 May 2022 7:41 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய வானொலியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இது 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சி ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன், ஏஐஆர் நியூஸ் இணையதளம் மற்றும் நியூசனேர் மொபைல் செயலி ஆகியவற்றின் முழு நெட்வொர்க்கிலும் ஒளிபரப்பப்படும். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி ஏஐஆர் நியூஸ், டிடி நியூஸ், பிஎம்ஓ மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் யூடியூப் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் இந்தி ஒலிபரப்பிற்குப் பிறகு, AIR பிராந்திய மொழிகளிலும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

முன்னதாக, மன் கி பாத் நிகழ்ச்சியின் இந்த பதிப்பிற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்ததாக பிரதமர் கூறினார். கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியின் அடிப்படையில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய சிறு புத்தகத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் அதிக அளவில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story