மணிப்பூர் வன்முறை: சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை!


மணிப்பூர் வன்முறை: சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை!
x

மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது.

கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.310 பேர் காயம் அடைந்தனர். அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு சென்றார். அதன்பின்னர் வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா? என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3,734 வழக்குகளில் 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்க மணிப்பூர் அரசு வலியுறுத்தி உள்ளது.


Next Story