ஆம்புலன்ஸ்களுக்கு தனி சைரன்கள் - மணிப்பூர் அரசின் அதிரடி உத்தரவு
போலீசாரால் பயன்படுத்தப்படாத தனித்துவமான ‘சைரனை’ ஆம்புலன்சுகள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்பால்,
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை திறம்பட பராமரிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போலீசாரால் பயன்படுத்தப்படாத தனித்துவமான 'சைரனை' ஆம்புலன்சுகள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ்கள், காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களால் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான ஒலிகளைக் கொண்ட சைரன்களைப் பயன்படுத்துவதால் எழும் பிரச்சினைகள் குறித்த விஷயத்தை மாநில அரசு பார்க்கிறது. இது பொதுமக்களுக்கு குழப்பம் மற்றும் பீதியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
எனவே மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களிடையே ஏற்படக்கூடிய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காகவும் ஆம்புலன்சுகளில் தனித்துவமான சைரன்களை பொறுத்த மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.