போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றவர் பஸ்சில் அடிபட்டு சாவு - 3 போலீசார் இடைநீக்கம்


போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றவர் பஸ்சில் அடிபட்டு சாவு - 3 போலீசார் இடைநீக்கம்
x

கைதியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜுரு மாவட்டம் பலேரி போலீஸ்நிலைய பகுதியை சேர்ந்தவர் பிரமோத் குமார் (வயது38). இவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

நேற்று முன்தினம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த பஸ்சில் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்த பிரமோத்குமார் பஸ்சில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்து கைதியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகளை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து, பைகானுர் சரக போலீஸ் ஐ.ஜி.,நேற்று உத்தரவிட்டார். அதற்கு பின்னரே பிரமோத்குமாரின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று இறுதிச் சடங்கு செய்தனர்.


Next Story